Enable Javscript for better performance
விட்டல்பட்டியில் \\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா விட்டல்பட்டியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இம்முகாமில் பட்டா மாறுதல் மற்றும் உள்பிரிவு பட்டா மாறுதலுக்கான மனுக்கள், முதியோர் மற்றும் விதவைகள் உதவித் தொகைக்கான மனுக்கள், புதிய குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டன. இதில் உடனடியாக 32 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. முகாமில் பேரையூர் வட்டாட்சியர் எஸ்.சிவராம், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் எஸ்.கருப்பையா, வருவாய் ஆய்வாளர் கருப்பையா மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai