Enable Javscript for better performance
விலையில்லா மடிக்கணினி வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி பேரையூர் சாலையில் அமைந்துள்ள டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

      பள்ளி தலைமை ஆசிரியர் கிரேஸ்சந்திரா வரவேற்றார். நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டி. தனசேகரன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      இவ்விழாவில் டி.இ.எல்.சி., நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.கள்ளபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை உசிலம்பட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் வழங்கினார். பார்வர்ட் பிளாக் கட்சியின் நகர செயலர் பாஸ்கரபாண்டியன், நகர் மன்றத் தலைவர் யு.பி.ஆர். பஞ்சம்மாள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவிய ஆசிரியர் பிரதீப் குமார் தொகுத்து வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் ஓய். அரசூர்பெருமாள் நன்றி கூறினார்.

      இதே போன்று சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 131 மாணவ மாணவிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஆர். ராஜபூபதி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் திலகவதி நன்றி கூறினார். உடன் பள்ளி ஆய்வாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai