Enable Javscript for better performance
2 மணி நேரம் தாமதமான கொல்லம் பயணிகள் ரயில்- Dinamani

சுடச்சுட

    

    சரக்கு ரயில் பெட்டி கழன்றதால் கொல்லம் பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை இரண்டு மணி நேரம் தாமதமாக மதுரை வந்து சேர்ந்தது.

     தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கி வந்த சரக்கு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு கள்ளிக்குடி அருகே வந்த போது, அதில் இருந்த ஒரு பெட்டி கழன்றது. உடனே தண்டவாளப் பணியில் இருந்த ஊழியர்கள் என்ஜின் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உடனடியாக அந்த சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு பெட்டியை இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த கொல்லம் பயணிகள் ரயில் கள்ளிக்குடி அருகே நிறுத்தப்பட்டது.

     இதன் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 5.10 மணிக்கு மதுரை வர வேண்டிய கொல்லம் பயணிகள் ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக காலை 7.40-க்கு வந்து சேர்ந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai