Enable Javscript for better performance
அரிசி ஆலை அதிபரை கடத்தி பணம், நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரிசி ஆலை அதிபரை கடத்தி பணம், நகை பறிப்பு

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 13th September 2015 07:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் செந்தில்நாதன்(28). அவனியாபுரத்தை அடுத்த ராஜம்மாள் நகரில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பங்குதாரராக உள்ளார். இவர் வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு காரில் சென்ற போது வழியில் மற்றொரு கார், இவரது கார் மீது மோதியதாம். இதையடுத்து காரிலிருந்து செந்தில்நாதன் இறங்கிய போது 3 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் ரூ.25 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.

    தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றவுடன் அவரை தங்கள் காரில் கடத்திச் சென்றனர். செல்லும் வழியில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி மற்றும் ரொக்கம் ரூ.16 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையில் அவரை இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், அவனியாபுரம் போலீஸார் 3 பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai