Enable Javscript for better performance
கொடிக்குளம் - மாட்டுத்தாவணி புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கொடிக்குளம் - மாட்டுத்தாவணி புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

    By உசிலம்பட்டி  |   Published on : 13th September 2015 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கொடிக்குளம் கிராமத்திலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு புதிய பேருந்து வழித்தடத்தை உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் சனிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

     இக்கிராம மக்கள் மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்வதாக இருந்தால் இரண்டு, மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டியுள்ளது. எனவே மாட்டுத்தாவணிக்கு புதிய பேருந்து வசதி செய்து தர வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிவந்தனர். இதனை கருத்தில் கொண்டு கொடிக்குளம் முதல் மாட்டுத்தாவணி வரை புதிய பேருந்து வழித்தடத்தை சட்டபேரவை உறுப்பினர் தொடக்கி வைத்தார்.

     இப்பேருந்து கருமாத்தூர், செக்காணூரணி, பெரியார், சிம்மக்கல் வழியாக மாட்டுத்தாவணி  செல்லும் என அறிவித்தார். புதிய பேருந்து வழித்தட துவக்க விழாவில் பார்வர்டு பிளாக் கட்சியின் ஒன்றியச் செயலர் எ.எஸ்.ரவி, அதிமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலர் செளந்திரபாண்டி, அரசு போக்குவரத்துக் கழக செக்காணூரணி கிளை மேலாளர் ஜெயராஜ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai