Enable Javscript for better performance
திரைப்படங்கள் இலக்கணம் மாறாமல் இருப்பது அவசியம்: நடிகர் ராஜேஷ்- Dinamani

சுடச்சுட

    

    திரைப்படங்கள் இலக்கணம் மாறாமல் இருப்பது அவசியம்: நடிகர் ராஜேஷ்

    By மதுரை  |   Published on : 13th September 2015 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரைப்படங்கள் இலக்கணம் மாறாமல் இருப்பது அவசியம் என்று திரைப்பட நடிகர் ராஜேஷ் கூறினார்.

     மதுரை மீடியா மற்றும் பிலிம் ஸ்டெடிஸ் அகாதெமியின் தொடக்க விழா மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் மேலும் பேசியதாவது:

     நடிப்பில் மூன்று வகை உண்டு. உடல் மொழி, உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் மற்றும் மொழித்திறன். இவை மூன்றிலும் சிறந்தவர்களாக மதுரையைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். திரைத்துறையின் ஆரம்ப காலத்தில் சாதித்த இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பெரும்பாலானோர் மதுரையைச் சேர்ந்தவர்களே. திரைப்படம் என்பது மிகப்பெரிய ஊடகம். திரைப்படங்கள் கலைகளின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். திரைத்துறை கனவோடு வரும் இளைஞர்கள், கலைகளுக்கு உயிரூட்டும் வகையிலான திரைப்படங்களை இயக்க வேண்டும்.  தொழில் நுட்பம் வளர வளர திரைப்படங்களுக்கான இலக்கணம் மாறி வருகிறது. இது ஒரு ஆபத்தான வழிமுறையாகும். இந்த நிலை மாற வேண்டுமெனில், திரைப்படங்களை இயக்கும் முன் தரமான திரைப்படங்களை பார்த்து அதிலிருந்து கேமரா கோணங்கள், பின்னணி இசை, படத் தொகுப்பு உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும். அதே போல் சமூக வலைதளங்களின் பெருக்கத்தால் திரைப்படங்கள் குறித்த தரமற்ற விமர்சனங்கள் பெருகி விட்டன. இந்த போலியான விமர்சனங்கள் வளரும் கலைஞர்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைகிறது. விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றும் முன் அதன் பாதிப்புகளை அறிந்து விமர்சிக்க வேண்டும். தரமான விமர்சனங்கள் வளரும் கலைஞர்களை மேலும் ஊக்குவிக்கும்.

     திரைத்துறைக்கு வரும் இளைஞர்கள் எதிர்படும் தோல்விகளை கண்டு பயப்படாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றார்.

     நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேராசிரியர் வசந்த் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, டிவிஎஸ் அபரஜிதா கார்ப்பரேட் நிறுவனத் தலைவர் பரத் கிருஷ்ணா, அகாதெமியின் தலைவர் த.சின்னராஜ் ஜோசப் ஜெய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai