Enable Javscript for better performance
தென் தமிழகத்தில் சாதி மோதல்களை தடுக்க தொழில் வளர்ச்சி அவசியம்: டாக்டர் கே. கிருஷ்ணசாமி- Dinamani

சுடச்சுட

    

    தென் தமிழகத்தில் சாதி மோதல்களை தடுக்க தொழில் வளர்ச்சி அவசியம்: டாக்டர் கே. கிருஷ்ணசாமி

    By மதுரை  |   Published on : 13th September 2015 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் தமிழகத்தில் நிலவும் சாதி மோதல்களைத் தடுக்க தொழில் வளர்ச்சி அவசியம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கூறினார்.

     மதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: தென் தமிழகம் தொழில் ரீதியாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் அந்தக் குறை போக்கப்பட வேண்டும்.

     ரூ.2.47 லட்சம் கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்பதை வரவேற்கிறோம். ஆனால், ஒரு மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாவிட்டால் அதற்கான பதிலை அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும். அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் தொடங்கப்படாத நாங்குனேரி தொழில் பூங்கா, மதுரை ஐடி பூங்கா உள்ளிட்டவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

     தென் தமிழகத்தில் நிலவும் சாதிய மோதல்களைத் தடுக்க கல்வி, போக்குவரத்து, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவை அவசியம். இங்கு தொழில் வளர்ச்சியை அதிகரிக்க தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

     தூத்துக்குடி துறைமுகம் மற்றும் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார்.

     பேட்டியின்போது, கட்சியின் மாநில இளைஞரணி செயலர் மதுரம் பாஸ்கர், மாவட்டச் செயலர் செ. பாஸ்கர், மேற்கு மாவட்டச் செயலர் முனியாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai