Enable Javscript for better performance
பாஜகவின் தேர்தல் கூட்டணி கனவு நிறைவேறாது: ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவின் தேர்தல் கூட்டணி கனவு நிறைவேறாது: ராமதாஸ்

    By மதுரை  |   Published on : 13th September 2015 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தங்களது அணியில் பாமக சேரும் என்ற பாஜகவின் கனவு நிறைவேறாது என பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் கூறினார்.

     மதுரையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது: தொழில் வளர்ச்சிக்காக நிலத்தை கையகப்படுத்தலாம். அவ்வாறு கையகப்படுத்தும் விவசாய நிலத்துக்கு 10 மடங்கு விலை தர வேண்டும். அங்கு அமையும் தொழிற்சாலையில் நிலம் அளித்தவருக்கு வேலை மற்றும் தொழிற்சாலை இயக்குநர் குழுவில் இடமளிப்பது அவசியம்.

     தமிழகத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தொலைநோக்குத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, தொடங்கப்பட்டுள்ள பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

     மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள கிரானைட் முறைகேட்டில் நில உச்சவரம்புக்கும் கூடுதலாக நிலம் வாங்கிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கூடுதல் நிலத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். மதுரையைப்போல அனைத்து மாவட்டங்களிலும் கனிமவள முறைகேடு குறித்த விசாரணையை ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயம் மூலமாக மேற்கொள்ள வேண்டும்.

     அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாமக  கூட்டணி உள்ளது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதியிலும் பாமக போட்டியிடும். பாஜகவுடன் கூட்டணி என்பது பாமகவைப் பொறுத்தவரை நனவாக முடியாத கனவாகும். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்களுடன் சேரலாம் என்றார்.

     பேட்டியின்போது கட்சித் தலைவர் கோ.க. மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai