Enable Javscript for better performance
புதுப்பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    புதுப்பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் சாலை மறியல்

    By மதுரை  |   Published on : 13th September 2015 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுப்பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள், மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     மதுரை மாவட்டம் பில்லிசேரியைச் சேர்ந்தவர் சித்ராதேவி (22). இவருக்கும் அலங்காநல்லூர் அருகேயுள்ள வலசையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மூக்கையாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

     இந்நிலையில், சித்ராதேவி இறந்து விட்டதாக அவரது வீட்டாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அவர்கள் வலசைக்கு வரும் முன் சித்ராதேவியின் சடலத்தை சுடுகாட்டுக்கு அவரது கணவர் வீட்டார் எடுத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

     சித்ராதேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதால், இதை கொலை வழக்காகப் பதிந்து விசாரிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த தல்லாகுளம் போலீஸார் அங்கு வந்து சமசரம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. ஆயினும் சித்ராதேவி சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.

     இதுகுறித்து போலீஸாரிடம் கேட்ட போது, குடும்பப் பிரச்னையில் சித்ராதேவி தூக்கிட்டு உயிரிழந்தார். ஆகவே இது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விசாரணை நடந்து வருகிறது. அத்துடன் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai