Enable Javscript for better performance
போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தல்

    By மதுரை  |   Published on : 13th September 2015 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற, அக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

     சென்னை ஐஸ் ஹவுஸ், நேதாஜி நகர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திண்டுக்கல் பேகம்பூர் ஆகிய இடங்களில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி மற்றும் மசூதிகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும். இப்பகுதிகளில் காவல் துறையினர் அதிக கவனம் செலுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி இப்பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் கழித்த சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். முதல் கட்டமாக வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai