Enable Javscript for better performance
மக்கள் நீதிமன்ற விசாரணையில் 246 வழக்குகளுக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் நீதிமன்ற விசாரணையில் 246 வழக்குகளுக்கு தீர்வு

    By மதுரை  |   Published on : 13th September 2015 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணையில் 246 வழக்குகளுக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டது.

    இதன் மூலம் மனுதாரர்களுக்கு ரூ.3,02,55,041 இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.  மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதியும், சமரச தீர்வு மையத் தலைவருமான கே.எச்.இளவழகன் தலைமை வகித்தார். முதன்மை சார்பு நீதிபதியும், சமரச தீர்வு மையச் செயலருமான சரவணன் முன்னிலை வகித்தார்.  ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கடாச்சலம், பொன்னுச்சாமி, வேலுச்சாமி ஆகியோர் அடங்கிய அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

    வங்கிகள் தொடர்பான வழக்குகள், மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் நீண்ட நாள்களாக தீர்வு காணப்படாத வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் என மொத்தம் 4,819 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 126 வழக்குகளுக்கு  தீர்வு காணப்பட்டது. இதன் மூலம், மனுதாரர்களுக்கு ரூ.67,89,011 இழப்பீடாக வழங்கப்பட்டது.

    மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், நுகர்வோர் வழக்குகள் போன்ற 1020 வழக்குகள் மற்றொரு அமர்வில் விசாரிக்கப்பட்டன. இதில் 120 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.2,34,26,530 இழப்பீடாக வழங்கப்பட்டது.

    இந்த மக்கள் நீதிமன்ற விசாரணையின் மூலம், மொத்தம் 246 வழக்குகளுக்கு   தீர்வு காணப்பட்டு, ரூ.3,02,55,041 இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai