Enable Javscript for better performance
மதுரையில் ஏடிஜிபி ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் டி.கே. ராஜேந்திரன் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

     தென்மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங், டி.ஐ.ஜி.க்கள் ஆனந்தகுமார் சோமானி (மதுரை), அறிவுச்செல்வம் (தேனி), முருகன் (நெல்லை), மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன் (திண்டுக்கல்), மயில்வாகனன் (ராமநாதபுரம்), துரை (சிவகங்கை), மகேஸ்வரன் (விருதுநகர்), அஸ்வினிகோட்னிஸ் (தூத்துக்குடி), மணிவண்ணன் (கன்னியாகுமரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், சட்டம், ஒழுங்கு மற்றும் வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக காவல்துறை உயரதிகாரிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai