Enable Javscript for better performance
முதலீட்டாளர்களுக்கு உதவிட கண்காணிப்புக் குழு: வர்த்தக சங்கம் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    முதலீட்டாளர்களுக்கு உதவிட கண்காணிப்புக் குழு: வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

    By மதுரை  |   Published on : 13th September 2015 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழில் தொடங்க அனுமதி, சலுகைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்கு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

     இதுகுறித்து சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல், தலைவர் என்.ஜெகதீசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

      தென் தமிழகத்தில் தொழில் வளம் பெருக தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருவது பாராட்டுக்குரியது. இருப்பினும், சர்வதேச முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மற்றும் தூத்துக்குடியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தொழில் வர்த்தக கண்காட்சி மையம் மற்றும் மாநாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு சரக்குகள் கையாளும் வசதி, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமான சேவை, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மதுரையில் இருந்து கொடைக்கானல், ராமேசுவரம், கன்னியாகுமரி, குற்றாலம் ஆகிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் ஹெலிகாப்டர் போக்குவரத்து வசதி கொண்டு வர வேண்டும். மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

     ஒற்றைச்சாளர முறையில் தொழில் அனுமதி, சலுகைகளை வழங்குவது, தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பது ஆகியவற்றுக்கு கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai