Enable Javscript for better performance
வழக்குரைஞர் கொலை வழக்கு: உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஒருவர் சரண்- Dinamani

சுடச்சுட

    

    வழக்குரைஞர் கொலை வழக்கு: உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

    By உசிலம்பட்டி  |   Published on : 13th September 2015 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்ட சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் வழக்குரைஞர் ஜமால் முகமது (32). திங்கள்கிழமை முன்விரோதம் காரணமாக அரசு மதுபானக் கடையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த சின்னராஜா மகன் குமரவேல் (24), உசிலம்பட்டி நீதிமன்றத்தில் நீதிபதி விவேகானந்தன் முன்னிலையில் சனிக்கிழமை சரணடைந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai