Enable Javscript for better performance
விலையில்லா பொருள்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

     இவ்விழாவில் உசிலம்பட்டி வட்டாட்சியர் அன்பழகன் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் பத்மநாபன் தொகுத்து வழங்கினார். தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் 3220 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி  வழங்கப்பட்டது. விழாவில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன் பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கினார். உடன் பார்வர்டு பிளாக் கட்சியின் நகர செயலர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட செயலர் சுகுமாறன், மண்டல துணை வட்டாட்சியர் தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் இசக்கிமுத்து, ஊராட்சித் தலைவர் பாண்டிச்செல்வி பெரியகருப்பன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai