Enable Javscript for better performance
விலையில்லா பொருள்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    பேரையூர் தாலுகாவில் விலையில்லா பொருள்களை 1967 பயனாளிகளுக்கு உசிலம்பட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் வழங்கினார்.

    பேரையூர் தாலுகா சேடபட்டி ஒன்றியத்திலுள்ள வண்டாரி, அணைக்கரைப்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்ற விலையில்ல மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் விழாவில் உசிலம்பட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் கலந்து கொண்டு 1967 பயனாளிகளுக்கு அவற்றை வழங்கினார்.

    இவ்விழாவில் சேடபட்டி ஒன்றியத் தலைவர் முனியம்மாள் பிச்சைமணி, பேரையூர் வட்டாட்சியர் சிவராம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai