Enable Javscript for better performance
362 இடங்களில் விநாயகர் சிலைகள்- Dinamani

சுடச்சுட

    

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 362 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து பூஜைகள் நடைபெறவுள்ளது.

     நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மாநகரில் 162 இடங்களிலும், ஊரகப் பகுதிகளில் 200 இடங்களிலும் சிலைகள் வைக்கப்படவுள்ளன. மதுரை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் பூஜைக்கு வைக்கப்படும் விநாயகர் சிலையை கூடல்புதூர், சிக்கந்தர்சாவடி பகுதிகளில் வடிவமைத்து வைத்துள்ளனர். நகரில் கடந்த ஆண்டை விட 10 சிலைகள் கூடுதலாக வைக்கப்படுவதாக இந்து முன்னணி அமைப்பினர் கூறினர். சிலைகள் 3 அடி முதல் 11 அடி வரை உயரம் கொண்டதாக உள்ளன. வீணை உள்ளிட்ட பொருள்களுடன் விதவிதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரில் செப்.19ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்று வைகையில் சிலைகள் கரைக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஊரகப் பகுதியில் செப். 18ஆம் தேதி எழுமலையிலும், 19ஆம் தேதி மேலூரிலும், 20ஆம் தேதி திருப்பரங்குன்றத்திலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. சிலைகள், சுற்றுச் சூழலுக்கு ஏற்ப களிமண், மாவுப் பொருள்களால் தயாரிக்கப்படுவதாக சிலை வடிவமைப்பாளர்கள் கூறினர். காவல்துறை ஒத்துழைப்புடன் விநாயகர் சதுர்த்தி  சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக இந்து முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.பரமசிவம் கூறினார்.

    விற்பனை மும்முரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை கைவினைப் பொருள்கள் விற்பனையகங்களில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai