Enable Javscript for better performance
அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டம் தொடக்கம்

    By மதுரை,  |   Published on : 14th September 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைக்கப்பட்டது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 30,500 குழந்தைகள் இத்திட்டத்தின்கீழ் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1000 மதிப்புள்ள, குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 7 ஆம் தேதி துவக்கிவைத்தார்.

    இந்த பெட்டகம் குழந்தைகளுக்கான துண்டு, ஆடை, படுக்கை விரிப்பு, பாதுகாப்பு வலை, நாப்கின், எண்ணெய், ஷாம்பூ, சோப்பு, சோப்பு டப்பா, நகம் வெட்டி, கிலுகிலுப்பை,பொம்மை, கைகழுவும் திரவம், குளியல் சோப்பு, சௌபாக்கியம் லேகியம் ஆகிய 16 வகையான பொருள்கள் அடங்கியதாகும். இப்பெட்டகம் அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கும் வழங்கப்படும்.

    மதுரையில் இத்திட்டத்தின் தொடக்கவிழா அரசு ராஜாஜி மருத்துமனை மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, 36 குழந்தைகளுக்குப் பரிசுப் பெட்டகங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில்,மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், ராஜாஜி மருத்துவமனை டீன் ரேவதி கயிலைராஜன், மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,புதுதில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மதுரை மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் ஏ.கே.போஸ், அண்ணாத்துரை, ஆர்.சுந்தரராஜன், துணைமேயர் கு.திரவியம், சுகாதாரத்துறை (நலப்பணிகள்) இணை இயக்குநர் (பொறுப்பு) மாலதிபிரகாஷ், துணை இயக்குநர் (சுகாதாரம்) சு.செந்தில்குமார்,உதவி இயக்குநர் அப்துல்கரீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழநதைகளுக்கு வழங்க தற்போது 1500 அம்மா நல பரிசுப் பெட்டகங்கள் இருப்பில் உள்ளன.

    மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறக்கும் 13500 குழந்தைகளும், தாலுகா மருத்துவமனைகளில் பிறக்கும் 4500 குழந்தைகளும், மாநகராட்சி மற்றும் நகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் 2500 குழந்தைகளும், ஆரம்பசுகாதார நிலையங்களில் பிறக்கும் 10ஆயிரம் குழந்தைகளும் இத்திட்டத்தின்கீழ் பயனடைவர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை மாநகராட்சி மண்டலம் எண்1-இல் உள்ள தாய்சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 39 குழந்தைகளுக்கு மேயர் விவி.ராஜன் செல்லப்பா பரிசுப் பெட்டகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) செ.சாந்தி, துணைமேயர் கு.திரவியம், மண்டலத்தலைவர் சாலைமுத்து மற்றும்

    மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai