Enable Javscript for better performance
\\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை கிழக்கு வட்டம் கொண்டபெத்தான் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், 46 நபர்களுக்கு உரிய சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.

    மதுரை மாவட்டத்தில் கொண்டபெத்தான், கீழக்குயில்குடி, கோவில்பாப்பாகுடி, சாமநத்தம், மருதூர், திருவாலவாயநல்லூர், சடச்சிப்பட்டி, சித்தூர், விட்டல்பட்டி, சூரக்குளம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கொண்டபெத்தான் கிராமத்தில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் சுப்பிரமணியன் பார்வையிட்டார். இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பட்டா நகல் வழங்குதல், கணினி சிட்டா, வருமானச் சான்று என 46 பேருக்கு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

    முன்னதாக, மதுரை கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். மதுரை கிழக்கு வட்டாட்சியர் சி.ரத்தினவேல், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடன் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai