Enable Javscript for better performance
அரசு மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கிக்கு நவீன சாதனம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கிக்கு நவீன சாதனம்

    By மதுரை,  |   Published on : 14th September 2015 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கிக்கு அதிநவீன ரத்தப் பரிசோதனை சாதனம் வாங்கப்பட்டுள்ளது.

    கடந்த 1969 ஆம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரத்த சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டது. கல்லூரி, சமூக அமைப்புகளிடமிருந்து ரத்த தானம் பெற்று சேமித்து, அதை அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. ரத்தத்தை சிவப்பு அணுக்கள், தட்டை செல்கள், பிளாஸ்மா என பிரித்து நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

    கடந்த 2010-இல் 14,803 யூனிட் ரத்தம் (ஒரு யூனிட் 350 மில்லிலிட்டர்) சேகரிக்கப்பட்டது. அச்சேமிப்பு 2013-இல் 21,646 என உயர்ந்து கடந்த ஆண்டு (2014) 22,594 என உயர்ந்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாகும்.

    நடப்பாண்டில் 2015 ஆகஸ்ட் வரை 17,500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-இல் ரத்த சேமிப்பு வங்கி மூலம் 36,506 நோயாளிகளுக்கு ரத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணிகளுக்கு 40 சதவிகிதம் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது.

    நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரத்தம் சரியாக அவருக்கு சேருமா என்பதை பல கட்ட சோதனைகள் மூலமே இதுவரை உறுதிசெய்தனர். இதற்கு கால அவகாசம் அதிகமானது. ஆகவே அரசு மருத்துவமனை டீன் ரேவதி கயிலைராஜன் உத்தரவின் பேரில் தற்போது ஜெல் மேட்ரிக் எனப்படும் நவீன மருத்துவ பரிசோதனை சாதனம் வாங்கப்பட்டுள்ளது.

    பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இச்சாதனமானது ஒரே நேரத்தில் 144 பேரின் ரத்த மாதிரியை ஒப்பிட்டுப் பார்த்து முடிவை சில நிமிடங்களிலேயே வெளிப்படுத்துகிறது. தென்மாவட்ட அளவில் மதுரை அரசு மருத்துவமனையில் மட்டுமே இச்சாதனம் உள்ளது.

    குழு பிரதிநிதிகள் பொறுப்பேற்பு: அரசு மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கியானது, மருத்துவக் கல்லூரி மாணவர் குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. 2015-16 ஆம் ஆண்டிற்கான வங்கி நிர்வாகக் குழு செயலராக டாக்டர் எஸ்.ஜெயமாணிக்கம் தேர்வு பெற்றுள்ளார்.

    புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிர்வாகிகளை ரத்தசேமிப்பு வங்கி ஆலோசகரும், மூத்த மருத்துவருமான எஸ்.செல்வசிதம்பரம் அறிமுகப்படுத்தினார். மருத்துவமனை டீன் ரேவதிகயிலைராஜன் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ஜி.வீரசேகர், ரத்த சேமிப்பு வங்கி அலுவலர் எம்.சிந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai