Enable Javscript for better performance
உணவகத்தில் திருட முயன்றவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    உணவகத்தில் இருந்து பணத்தை திருட முயன்ற ஊழியர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(43). இவர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். அதே ஹோட்டலில் கடைநிலை ஊழியராக பணி புரிபவர் செந்தில்குமார்(31). சனிக்கிழமை இரவு ஹோட்டலை மூடிவிட்டு கணக்குகளை சரி பார்க்கும் பணியில் கணேசன் இருந்துள்ளார். அப்போது ஹோட்டல் கல்லா பெட்டியில் இருந்த ரூ.2 ஆயிரத்தை செந்தில்குமார் திருட முயன்றுள்ளார். இதைப் பார்த்து கணேசன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து கணேசன் அளித்த புகாரின் பேரில் திடீர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai