Enable Javscript for better performance
கல் விழுந்ததில் நீதிபதி கார் கண்ணாடி சேதம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் கல் விழுந்ததில் உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் கண்ணாடி சனிக்கிழமை சேதமடைந்தது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் எஸ்.வைத்தியநாதன். இவர் சனிக்கிழமை லோக்அதாலத் விசாரணைக்காக மதுரை வந்திருந்தார். இவரது கார் ஓட்டுநராக ஐயப்பன் (40) உள்ளார். ஐயப்பன் நீதிபதி குடும்பத்தினருடன் காரில் சனிக்கிழமை பகலில் கோரிப்பாளையத்திலிருந்து ஏ.வி.மேம்பாலத்தில் சென்றுள்ளார். அப்போது கார் முன்பக்க கண்ணாடி மீது கல் விழுந்துள்ளது. இதில் கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து ஐயப்பன் மதிச்சியம் போலீஸில் புகார் அளித்தார்.

    புகார் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai