Enable Javscript for better performance
சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருநகர் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை தொடங்கியது.

    இந்து அறநிலையத்துறைக்கு உள்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது.

    இதனையொட்டி காலையில் மூலவருக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு யாகத்தில் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது.

    லட்சார்ச்சனை தொடர்ந்து நான்கு நாள்களுக்கு நடைபெற்று புதன்கிழமை நிறைவுபெறும். செப்.17 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று அருள்மிகு சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். அன்று மாலை சிறப்பு அலங்காரத்தில் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ரா.ஜெயராமன், கணக்கர் இதயராஜன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai