Enable Javscript for better performance
செப்.16}இல் தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    செப்.16}இல் தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்

    By மதுரை  |   Published on : 14th September 2015 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருள்மிகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசி தெப்பத்திருவிழா புதன்கிழமை (செப்.16) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    மதுரையின் மிகப் பழம் பெருமைமிக்க அழகர்மலையில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசி பெருந்திருவிழா நடைபெறுகிறது. விழாவின் தொடக்கமாக புதன்கிழமை காலை 7.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அன்று இரவில் பெருமாள் அன்னவாகனத்தில் எழுந்தருள்கிறார். தினமும் காலை, இரவில் சுவாமி சிம்மம், அனுமார், கெருட, சேஷ வாகனங்களில், ராமாவதாரம், கஜேந்திரமோட்சம், ராஜாங்கசேவை உள்ளிட்ட அலங்காரங்களில் எழுந்தருள்வார்.

    வரும் 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை சேஷவாகனத்தில் சுவாமி எழுந்தருளும் நிலையில், இரவில் புஷ்பவாகனத்தில் எழுந்தருளுகிறார். 25-ஆம் தேதி சப்தாவர்ணம், பூச்சப்பரம் நடைபெறும் நிலையில், 26-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறுகிறது. இதில் பிராட்டியருடன் சுவாமி தெப்பத்தில் காலை, மாலையில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இதற்காக திருக்கோயில் அருகேயுள்ள தெப்பத்தில் நீர் நிரப்பப்பட்டுள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், செயல் அலுவலர் க.செல்லத்துரை ஆகியோர் செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai