Enable Javscript for better performance
திருச்செந்தூர் கடலில் மனிதக்கழிவு கலக்கப்படுகிறதா?- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் கடலில் மனிதக்கழிவு கலக்கப்படுகிறதா?

    By மதுரை,  |   Published on : 14th September 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் கோயில் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் மனித கழிவுகள் கடலில் கலக்கப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து ஆய்வு செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது.

    திருச்செந்தூரைச் சேர்ந்த மணல்மேடு எம்.சுரேஷ் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. இவற்றில் முறைப்படி செப்டிக் டாங்க் கட்டப்படவில்லை. இந்த விடுதிகள், உணவகங்களில் இருந்து மனித கழிவுகள் வள்ளிக்குகை அருகே கடலில் கலக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு, நீர் மாசு ஏற்பட்டு நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது.

    கடலில் மனிதக் கழிவுகள் கலப்பதை தடுப்பதற்காக கோயில் விடுதிகள், உணவகங்களில் செப்டிங் டாங்க் கட்ட கோயில் நிர்வாகதத்துக்கு 2012 இல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் திருச்செந்தூர் சிறப்பு நிலை ஊராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கோயில் தங்கும் விடுதிகள், உணவகங்களில் இருந்து மனித கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், கடலில் மனிதக் கழிவுகளைக் கலப்பதற்காக கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், கோயில் விடுதிகளில் இருந்து மனித கழிவுகள் கடலில் கலப்பதாக கூறப்படுவது உண்மையல்ல என்றார்.

    இதையடுத்து திருச்செந்தூர் கோயில் பகுதியை மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை செப்.29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai