Enable Javscript for better performance
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

    தமிழ் மாநிலக் காங்கிரஸ் சார்பில் மதுவிலக்கை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நிகழ்ச்சியை மதுரை விளக்குத்தூணில் தொடங்கிவைத்து ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியதாவது:

    மதுவிலக்கை வலியுறுத்தி தமாகா சார்பில் பொதுமக்களிடையே கையெழுத்துப் பெறும் இயக்கம் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. பொதுமக்கள் கையெழுத்துகளுடன் மனு ஆளுநரிடம் அளிக்கப்படும்.

    கடந்த 1937 சேலத்தில் காங்கிரஸால் செயல்படுத்தப்பட்ட மதுவிலக்கு, 1948 -இல் தமிழகம் முழுதும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், 1971-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகே தமிழகத்தில் மீண்டும் மது விற்பனை தொடங்கியது.

    தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மது அருந்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மதுவால் நமது இளைய சமுதாயம் சீரழிந்துவருகிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனம், கோயில்கள் அருகேயுள்ள மதுக்கடைகளை மூடவேண்டும். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி மக்கள் நலன் காக்கப்படவேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலர் ஜெய்ஹிந்த்புரம் வி.முருகன், கட்சியின் மாநகர் தலைவர் சேதுராமன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், முருகவேல்ராஜன் மற்றும் மைதீன்பாஷா, பாரத்நாச்சியப்பன், மக்கள் தொடர்பாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    விவசாய அணிக் கூட்டம்: முன்னதாக காலேஜ்ஹவுஸ் வளாகத்தில் தமாகாவின் தென்மாவட்ட விவசாயிகள் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் விவசாயப் பிரிவு மாநிலத்தலைவர் புலியூர் நாகராஜன் சிறப்புரையாற்றினார். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட தமாகா விவசாய அணியினர் பங்கேற்றனர். கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில் மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்தவேண்டும். மதுரை மாவட்ட கண்மாய்களை பாதுகாக்கவேண்டும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai