Enable Javscript for better performance
பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

    By மதுரை,  |   Published on : 14th September 2015 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் க.திவ்யநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பா.முகிலன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் டி.தென்கரை முத்துபிள்ளை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் முருகன், தமிழக தமிழ் ஆசிரியர் கழக மாவட்ட இணைச் செயலர் பி.அழகுமலைக்கண்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாய் இருந்து உயர்நிலை தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் பதவி உயர்வு பெற்ற அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் எம்.பில் முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், முதுகலை ஆசிரியர் பணியில் இருந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதல் செய்யும்போது பதவி உயர்வாக கருதி 6 சதவீத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்தில் யுஜிசி நிர்ணயித்த தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai