Enable Javscript for better performance
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலில் கருத்து வெளியிட்டவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதக் கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலில் கருத்து வெளியிட்டவர் கைது

    By திருமங்கலம்  |   Published on : 14th September 2015 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதக் கலவரத்தை தூண்டுவதுபோல் முகநூலில் கருத்து வெளியிட்டவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    சவூதி அரேபியாவில் மெக்காவில் உள்ள அல்ஹரம் மசூதியில் பளுதூக்கி சரிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்த கருத்துகளை முகநூலில் பலர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருமங்கலம் கப்பலூரைச் சேர்ந்த பூ.வேல்முருகன்(25) என்பவர் முகநூலில் கருத்துகளை பதிவு செய்திருந்தார். அதில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவு செய்திருந்தாராம். இதைப்பார்த்த திருமங்கலம் கீழபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ர.அஜ்மீர்அலி(37) ஆதாரங்களோடு திருமங்கலம் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் எஸ்.அன்னராஜ், காவல்துணை ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் வேல்முருகனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். வேல்முருகன் திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai