Enable Javscript for better performance
மதுரையில் ரூ.2.15 கோடி விலையில்லா பொருள்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் ரூ.2.15 கோடி விலையில்லா பொருள்கள் வழங்கல்

    By மதுரை,  |   Published on : 14th September 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 5,070 பயனாளிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான விலையில்லா பொருள்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

    மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட மேலப்பொன்னகரம், மகபூப்பாளையம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 5,27,840 பேருக்கு ரூ.224.33 கோடி மதிப்பில் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 17,315 பெண்களுக்கு ரூ.22.96 கோடி மதிப்பில் 69,592 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

    விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி தலைமை வகித்தார். தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மதுரை மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், மதுரை மத்திய தொகுதி உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜன், மாநகராட்சி துணைமேயர் கு.திரவியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai