Enable Javscript for better performance
மதுரையில் விளையாட்டுப் பல்கலை. அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் விளையாட்டுப் பல்கலை. அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை

    By மதுரை,  |   Published on : 14th September 2015 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் விளையாட்டுப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஏபிவிபி (அகில பாரத வித்யார்த்தி பரிஷத்) தேசியச் செயலர் ஆர்.ராஜ்குமார் கூறினர்.

    மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநகர் ஏபிவிபி மாணவர்களுக்கான பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் பூரண மது விலக்கை ஆதரித்து வரும் அக்டோபரில் ஏபிவிபி சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    தமிழகத்தில் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவது அவசியம்.

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணியை சமீபத்தில் சந்தித்து மனு அளித்துள்ளோம். அதில் தமிழகத்தில் தென் மாவட்ட மாணவ, மாணவியருக்காக ஐ.ஐ.டி. கிளை அமைக்க வேண்டும். மதுரையில் விளையாட்டு பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம். பரிசீலிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார் என்றார்.

    பயிற்சி கூட்டத்தில் என்.கே.குமரேஷ், தணிக்கையாளர் எச்.ஆதிஷேசன், பேராசிரியர் ஜெகநாதன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் பேசினர். அரவிந்த் நன்றி கூறினார்.

    நிர்வாகிகள் தேர்வு: மதுரை மாநகர் ஏபிவிபி 2015-16 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் விவரம்: தலைவர்- பேராசிரியர் வெங்கடேஷ்பாபு, துணைத் தலைவர்கள்-ஆர்.முருகேஸ்வரன், சந்தனகுமார், செயலர்- பீமராவ், இணைச் செயலர்- கோபி, ரங்கராஜ், பொருளாளர்- தினேஷ்குமார், மாணவியர் பொறுப்பாளர் சுபாஷினி, அலுவலகச் செயலர் தினேஷ்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai