Enable Javscript for better performance
மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு

    By மதுரை  |   Published on : 14th September 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் புதன்கிழமை (செப்.16) நடைபெறுகிறது.

    மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு மாநகராட்சி பிரதான அலுவலகமான அண்ணா மாளிகையில் செப்.16 ஆம் தேதி நடைபெறும்.

    அன்றைய தினம் காலை 10 மணிக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், 11 மணிக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், பகல் 12 மணிக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், பிற்பகல் 3 மணிக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

    காலியிடம் மற்றும் பணிமூப்பு பட்டியல் மாநகராட்சி அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர்.

    இத்தகவல் மதுரை மாநகராட்சி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai