Enable Javscript for better performance
முன் விரோதம் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு கத்திக்குத்து- Dinamani

சுடச்சுட

    

    முன் விரோதம் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு கத்திக்குத்து

    By மதுரை,  |   Published on : 14th September 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன் விரோதம் காரணமாக இளைஞரை கத்தியால் குத்திய மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (42). இவரது மகன் செல்வக்குமார் (18). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவருக்கும் சதாசிவநகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (19), அரவிந்த் (18) மற்றும் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த அஜித்(18) ஆகியோருக்கும் இடையே பள்ளியில் படிக்கும்போது ஏற்பட்ட பிரச்னைகளால் முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சனிக்கிழமை மாலை கல்லூரியில் இருந்து செல்வக்குமார், அவரது நண்பர் அருண்குமார் (19) என்பவருடன் வீடு திரும்புகையில், அவரது வீட்டின் அருகே அவரை வழி மறித்த மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், தினேஷ் மற்றும் அரவிந்த் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வக்குமாரை குத்தியுள்ளனர்.

    இதை தடுக்க வந்த அருண்குமாரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து செல்வக்குமாரின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai