Enable Javscript for better performance
விலையில்லா மடிக்கணினி வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    சோழவந்தான் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை சோழவந்தான் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.வீ.கருப்பையா வழங்கினார்.

    சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட கவுன்சிலர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார். வாடிப்பட்டி ஒன்றியத் தலைவர் அன்னக்களஞ்சியம், கவுன்சிலர்கள் துரைபுஷ்பம், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யப்பநாயக்கன்பட்டி, அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, மேலக்கால் அரசு கள்ளர் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சோழவந்தான் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.வீ.கருப்பையா வழங்கினார்.

    விழாவில் ஒன்றியக் கவுன்சிலர்கள், ராமச்சந்திரன், முல்லைசக்தி, சேது, புலவர் மணி, உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai