Enable Javscript for better performance
அரசுப் பொருள்காட்சி: சிறந்த அரங்குகளுக்கு கேடயங்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பொருள்காட்சி: சிறந்த அரங்குகளுக்கு கேடயங்கள் வழங்கல்

    By மதுரை  |   Published on : 15th September 2015 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பொருள்காட்சியில் சிறந்த அரங்குகளுக்கான கேடயங்களை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வழங்கினார்.

     சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த ஏப்.12 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை அரசுப் பொருள்காட்சி நடைபெற்றது. இதில் அரசுத் துறைகள் சார்பில் 15 அரங்குகளும், அரசு சார்பு நிறுவனங்கள் சார்பில் 3 அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதில் அரசுத் துறை அரங்குகளில் மதுரை மாநகரக் காவல் துறைக்கு முதல் பரிசும், வருவாய்த் துறைக்கு இரண்டாவது பரிசும், தோட்டக்கலைக் கலைத் துறைக்கு மூன்றாவது பரிசும் கிடைத்துள்ளது. அரசு சார்பு நிறுவனங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முதல் பரிசுக்கும், மதுரை மாநகராட்சி இரண்டாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டது.

    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை பரிசுக் கேடயங்களை ஆட்சியர் சுப்பிரமணியன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, மாநகரக் காவல் உதவி ஆணையர் தொல்காப்பியன், தனித்துணை ஆட்சியர் கு.முருகன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பி.நிர்மலாதேவி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai