Enable Javscript for better performance
உசிலம்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 பேர் கைது

    By மதுரை  |   Published on : 15th September 2015 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

     மதுரை மற்றும் வெளிமாவட்டங்களில் பல்வேறு குற்றங்களில் சம்பந்தப்பட்ட சிலர் உசிலம்பட்டி மாதரை அருகே தனியார் தோட்டத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

     உசிலம்பட்டி போலீஸார் விரைந்து சென்று தனியார் தோட்டத்தில் சனிக்கிழமை இரவு சோதனையிட்டனர். அப்போது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சேர்ந்த பிரபல ரெளடி குழுவில் உள்ள பிள்ளையார் கணேசன் (24) மற்றும் கீழக்கரை சதாம் உசேன் (25), நக்கலப்பட்டி முத்துராமன் (23), பழனி (24), மேலமாதரை சுந்தரராஜன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  கைதானவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கத்தி, வாள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தோட்டத்திலிருந்து தப்பிய மேலும் 4 பேரைத் தேடிவருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai