Enable Javscript for better performance
காவல், சிறைத்துறையில் 11 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காவல், சிறைத்துறையில் 11 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்

    By மதுரை  |   Published on : 15th September 2015 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் 11 பேருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

     சிறப்பான பணிக்காக தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் பரிசு பெறுவோர் விவரம்: மதுரை மத்திய சிறை உதவி சிறை அலுவலர் டி.சுந்தரராஜன், திருமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பிரிவு நிலைய அலுவலர் எம்.அரிராமன், மதுரை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் இசக்கிஆனந்தன், மதுரை தல்லாகுளம் போக்குவரத்துப்  பிரிவு உதவி ஆணையர் ஏ.திருமலைக்குமார், தமிழ்நாடு 6 ஆவது சிறப்பு பட்டாலியன் ஆய்வாளர் வி.ஜெயராமன்.

     மதுரை காவல்துறை தொலைத்தொடர்பு பிரிவு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) என்.ரகுபதி, மதுரை குற்றப்பிரிவு சிஐடி (எஸ்ஐடி) உதவி ஆய்வாளர் பி.சாந்தலட்சுமி, குற்றப்பிரிவு சிஐடி தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கே.மைலூர்மணி, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் எம்.ஆத்தீஸ்வரன், தலைமைக் காவலர் பி.காந்தி, மதுரை மாநகர் போக்குவரத்துப் பிரிவு தலைமை காவலர் எம்.ஜீவானந்தம்.

     சிறந்த பணிக்கான பதக்கம் பெறுவோரில் தலைமைக் காவலருக்கு ரூ.4 ஆயிரம், உதவி, துணைக் கண்காணிப்பாளர்களுக்கு ரூ.10 ஆயிரம், சிறை அலுவலருக்கு ரூ.6 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai