சக்கைகல் ஏற்றி வந்த டிராக்டர்கள் பறிமுதல்
By பேரையூர் | Published on : 15th September 2015 04:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டாட்சியர் சிவராம் மங்கள்ரேவு பகுதியில் மணல் திருட்டை தடுப்பது சம்பந்தமாக ரோந்து சென்ற போது, மங்கல்ரேவு பகுதியிலிருந்து இரண்டு டிராக்டர்கள் வந்து கொண்டிருந்தன.
அதனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டு டிராக்டர்களையும் வட்டாட்சியர் பறிமுதல் செய்தார். மேலும் மேல் நடவடிக்காக உசிலம்பட்டி கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தார்.