Enable Javscript for better performance
சுங்கச்சாவடி கண்ணாடி உடைப்பு: ஒருவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    சுங்கச்சாவடி கண்ணாடி உடைப்பு: ஒருவர் மீது வழக்கு

    By திருமங்கலம்  |   Published on : 15th September 2015 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலம் சுங்கச்சாவடியில் தகராறில் ஈடுபட்டு கண்ணாடியை உடைத்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

        திருமங்கலம் மறவன்குளத்தைச் சேர்ந்தவர் மு.சுந்தரபாண்டி(45). இவர் சிவகங்கை பதிவு எண் கொண்ட வாகனத்தில் மதுரையில் இருந்து திருமங்கலத்திற்கு வந்து கொண்டிருந்தார். கப்பலூர் சுங்கச்சாவடியை அவர் கடக்கும்போது அவரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக்கட்டணம் கேட்டுள்ளனர். அதற்கு சுந்தரபாண்டி உள்ளூர்காரனிடமே கட்டணம் கேட்கிறீர்களா என்று கூறி சுங்கச்சாவடி வசூல் மையத்தின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளர் குருசாமி கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் நகர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai