Enable Javscript for better performance
ஜனதாதளம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் சிவாஜி சிலையை தற்போதைய இடத்திலிருந்து மாற்றக்கூடாது என வலியுறுத்தி மதுரையில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஜான்சிராணி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டத் தலைவர் பாக்கியத்தேவர் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் க.ஜான்மோசஸ் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார். தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத் தலைவர்களை இளந்தலைமுறைக்கு விளக்கும் வகையில் திரைப்படங்களில் நடித்தவர் சிவாஜி. ஆகவே அவரது சிலையை சென்னை கடற்கரை பகுதியிலிருந்து அகற்றக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai