Enable Javscript for better performance
தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: திருமாவளவன்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: திருமாவளவன்

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 15th September 2015 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

    அவனியாபுரத்தில் மறைந்த தலித் தலைவர் மலைச்சாமியின் 26ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனை தலித்துகளின் தேசிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தலித்துகளை காப்பது தமிழக அரசின் கடமையாகும். இந்தியா வரும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் இலங்கையில் தமிழர்கள் பகுதியில் தமிழர்களை மறுகுடியேற்றம் செய்து ராணுவம் மற்றும் அத்துமீறி குடியிருக்கும் சிங்களர்களை வெளியேற்ற பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும்.

    கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரி சகாயத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவரது அறிக்கை வெளிவந்தால் குவாரிகள் முறைகேடுகள் வெளிவரும். மக்கள் நல இயக்கம் மக்களுக்கான பல்வேறு போராட்டங்களைச் செய்யும் இயக்கமாகும். இதுவே தேர்தலுக்கான கூட்டணியாகவும் அமையும். தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

    பின்னர் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் ஓம்சக்தி நகரில் கட்சிக் கொடியேற்றி அங்கு படிப்பகம் ஒன்றையும் திறந்து வைத்தார். முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் மேற்கு மாவட்டச் செயலர் ரா.அய்யங்காளை தலைமையில் வரவேற்பளிகப்பட்டது. இதில், மாவட்டச் செயலர் செல்லப்பாண்டி, இன்குலாப் உள்ளிட்ட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai