Enable Javscript for better performance
நரபலி புகார்: பிஆர்பி நிறுவன உரிமையாளர்கள், 3 பேருக்கு அழைப்பாணை- Dinamani

சுடச்சுட

    

    நரபலி புகார்: பிஆர்பி நிறுவன உரிமையாளர்கள், 3 பேருக்கு அழைப்பாணை

    By மேலூர்  |   Published on : 15th September 2015 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிரானைட் குவாரியில் மனநலன் பாதிக்கப்பட்டோர் நரபலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர்கள் மற்றும் 3 பேருக்கு போலீஸார் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

      கிரானைட் குவாரிகளில் மனநலன் பாதிக்கப்பட்டோர் நரபலி கொடுக்கப்பட்டதாகவும், அதில், இருவர் சடலங்கள் இ.மலம்பட்டி மணிமுத்தாறு கரையில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டதாகவும் கிரானைட் முறைகேடு விசாரணைக்கான சட்ட ஆணையர் உ.சகாயத்திடம், கிரானைட் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிய சேவற்கொடியோன் புகார் அளித்திருந்தார்.

      இதையடுத்து சேவற்கொடியோனிடம் வாக்குமூலம் பெற்ற இ.மலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின்பேரில், பிஆர்பி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஜோதிபாசு, கிரேன் பராமரிப்பாளர் பரமசிவம், ஐயப்பன் ஆகியோர்  மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சந்தேக மரணம், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.  மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சிபிஐ விசாரணை தேவை: "கிரானைட் தொடர்பான வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்திலேயே நரபலி புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை சட்டத்துக்கு உள்பட்டு உண்மைநிலையை வெளிப்படுத்துவோம்.

      இப்பிரச்னையை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்' என பி.ஆர்.பி. நிறுவன தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai