Enable Javscript for better performance
நீரில் மூழ்கி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் நீச்சல் தெரியாத நிலையில் குவாரி பள்ளத்தில் குளித்த பத்தாம் வகுப்பு மாணவர் மூச்சுத்திணறி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.

     மதுரை அனுப்பானடி பகுதி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் பழனிகுமார் (15). ஜவுளிக்கடை தொழிலாளி. இவரது மகன் தனசேகரன் (15). தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்.

     நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை கருப்பாயூரணி பாண்டியன்கோட்டை கண்மாய் அருகே உள்ள குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் குளிக்கச்சென்றார்.

     தனசேகரனுக்கு நீச்சல் தெரியாது. இந்நிலையில் குவாரி பள்ளம் நீரில் குதித்த அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். தகவலறிந்த கருப்பாயூரணி போலீஸார் விரைந்து சென்று நீண்டநேரத் தேடுதலுக்குப் பிறகு மாணவர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  தொழிலாளி பழனிக்குமாருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருந்த நிலையில், மகன் உயிரிழந்தது அவரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai