Enable Javscript for better performance
பட்டா வழங்கி 16 ஆண்டுகள் ஆகியும் நிலத்தை ஒப்படைக்கத் தாமதம்: ஆட்சியரிடம் புகார் - Dinamani

சுடச்சுட

    

    பட்டா வழங்கி 16 ஆண்டுகள் ஆகியும் நிலத்தை ஒப்படைக்கத் தாமதம்: ஆட்சியரிடம் புகார்

    By மதுரை  |   Published on : 15th September 2015 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டா வழங்கி 16 ஆண்டுகள் ஆகியும், நிலம் அளவீடு செய்து ஒப்படைக்க காலம் தாழ்த்துவதாக உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் புகார் தெரிவித்தனர்.

     மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குறவகுடி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தினர் 68 பேருக்கு, 1999 இல் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்படி நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால், நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க முடியவில்லை. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பயனாளிகள், மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் திங்கள்கிழமை மனு கொடுத்தனர்.

     அதன் விவரம்:

     அரசு பட்டா வழங்கி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை நிலத்தை அளவீடு செய்து ஒப்படைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் கண்டுகொள்ளவில்லை. மேற்படி நிலத்தின் மீது வழக்கு நடப்பதாகக் கூறி தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர். ஆகவே, பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai