Enable Javscript for better performance
பாரதி நினைவு தினக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தியாக தீபம் பேரவை சார்பில் பாரதியாரின் 94 ஆவது நினைவு தினக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பேரவை அமைப்பாளர் அ.பாலு தலைமை வகித்தார். யோகம் மாரிமுத்து முன்னிலை வகித்தார். கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம், தூய வரலாறு எனும் தலைப்பில் பேசினார்.  பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாரதியாரின் சிலைக்கு எழுத்தாளர் லேனா.தமிழ்வாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, சேதுபதி பள்ளி தாளாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai