Enable Javscript for better performance
பேருந்து மோதி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தே.கல்லுப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

     மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த நல்லசிவம் மகன் அப்பர்சுந்தரேசன் (30). இவர்  திங்கள்கிழமை இரவு ராஜபாளையம்-மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார். மதுரை நோக்கி அவர் சென்றுகொண்டிருந்தார். தே.கல்லுப்பட்டி சமீபம் அம்மாபட்டி எஸ் வளைவு அருகே சென்ற போது மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து  மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அப்பர்சுந்தரேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தே.கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து பேருந்து  ஓட்டுநர் சிவகாசி ஆணைக்குட்டத்தைச் சேர்ந்த கணேசனைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai