Enable Javscript for better performance
மேலூரில் பள்ளிக் குழந்தைகள் திடீர் காய்ச்சலால் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேலூரில் பள்ளிக் குழந்தைகள் திடீர் காய்ச்சலால் பாதிப்பு

    By மேலூர்  |   Published on : 15th September 2015 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூரிலுள்ள அரசு உதவிபெறும் அல் அமீன் பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் 20-க்கு மேற்பட்டோர் திடீர் காய்ச்சல் காரணமாக பாதிப்படைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.

    இப்பள்ளியில் படித்துவரும் மாணவ மாணவியர் கடந்த சில தினங்களாக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு உள்ளாகி மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

     பள்ளிக்கு அருகிலுள்ள மண்கட்டி தெப்பக்குளம், வீரசூடாமணிக் கண்மாய்களில் தேங்கியுள்ள கழிவுநீர், பள்ளி வளாகத்தையொட்டி செல்லும் கழிவு நீரோடைக் கால்வாய் ஆகியவற்றிலிருந்து வரும் கொசுக்களே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலூர் நகராட்சி ஆணையர் சுருளிநாதன், மேலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன் மற்றும் மதுரை சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில் உத்தரவின் பேரில் சுகாதாரக் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.  பள்ளி வளாகத் தூய்மை குறித்து ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினர். மேலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமார் தலைமையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளி இடைவேளையின்போது சுகாதாரமற்ற தின்பண்டங்கள், ஐஸ் உள்ளிட்டவைகளை மாணவர்கள் வாங்கிச் சாப்பிட்டதே உடல்நலக்குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai