அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
By வாடிப்பட்டி | Published on : 16th September 2015 07:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வாடிப்பட்டியில் அண்ணாவின் 107ஆவது பிறந்தநாளையொட்டி அவரதுசிலைக்கு அ.தி.மு.க.- தி.மு.க.வினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மராஜா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், முருகேசன், ஒன்றியத் தலைவர் அன்னகளஞ்சியம், துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் வெ.பாப்புரெட்டி வரவேற்றார்.
தி.மு.க. சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் தலைமை வகித்தார். முன்னாள் பேரூர் செயலாளர்கள் மு.பால்பாண்டியன், கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் கட்சிப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பாக நடந்த நிகழ்சிக்கு ஒன்றியச் செயலாளர் சுப.ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.