Enable Javscript for better performance
ஆதார் அட்டை பதிவு 84 சதம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் மற்றும் உடற்கூறுகள் பதிவுப் பணி 84 சதவீதம் நிறைவடைந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    ஆதார் அட்டை வழங்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக புகைப்படம் மற்றும் உடற்கூறுகள் பதிவு முகாம், மாவட்டத்தில் 10 பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுரை ஈ.வெ.ரா. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த முகாமை ஆட்சியர் சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அவர் பேசியது: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் அட்டைக்கு சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. 10 குழுக்கள் இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் இறுதிக்குள் இப் பணி நிறைவடையும்.

    மதுரை மாநகரப் பகுதியில் மட்டும் இரு சுற்றுக்களாக நடைபெற்ற முகாமில் 10 லட்சத்து 77 ஆயிரத்து 622 பேருக்கு புகைப்படம் மற்றும் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டன. மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் நிரந்தர முகாம் அமைக்கப்பட்ட பிறகு 1,10,916 பேருக்கு புகைப்படம், உடற்கூறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

     மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) செ.சாந்தி, மதுரை வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமாரி, முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செல்வராஜ், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கென்னடி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai