Enable Javscript for better performance
ஆலயப் பாதுகாப்புக்குழு உழவாரப்பணி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு ஹிந்து ஆலயப் பாதுகாப்புக்குழுவின் திருக்கோயில் பக்தர் பேரவை சார்பில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

     மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நடைபெற்ற உழவாரப் பணியில் பாதுகாப்புக் குழு மாநிலச் செயலர் பி.சுந்தரவடிவேல், அமைப்பாளர் டி.வாசுதேவன், பொருளாளர் எம்.கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.  சோழவந்தான் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத திருமூலநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற உழவாரப்பணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

     ஆலோசனைக் கூட்டம்: ஹிந்து ஆலயப்பாதுகாப்புக் குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை, உழவாரப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திருக்கோயில் பணியாளர்கள் போராட்டம் தேவையற்றது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai