Enable Javscript for better performance
காமராஜர் பிறந்தநாள் விழா: பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு- Dinamani

சுடச்சுட

    

    காமராஜர் பிறந்தநாள் விழா: பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 16th September 2015 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநகர் ஐக்கிய நாடார்கள் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

     திருநகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சோப்-டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலர் வி.எஸ்.மணிமாறன் தலைமை வகித்தார். திருநகர் ஐக்கிய நாடார் சங்க தலைவர் டி.பிருந்தா ஐசக் வரவேற்றார். நாடார் மகாஜன சங்க பொதுச்செயலர் ஜி.கரிக்கோல்ராஜ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் இயக்குநர் பெரீஸ்.மகேந்திரவேல், பெனிட் அன்கோ இயக்குநர் பெனிட்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.

     மேலும் மாணவர்களுக்கான விநாடி வினா மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சங்க நிர்வாகிகள் ஜெயராஜ், எஸ்.ஆறுமுகசாமி, காமராஜ், காசி, செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai